டெக்

அசத்தலான சிறப்பம்சங்கள்... 'சாம்சங் கேலக்ஸி எம் 21 எஸ்’ன் முழு விவரம் இதோ.!

JustinDurai

முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், தனது லேட்டஸ்ட் கேலக்ஸி மாடல்களில் ஒன்றான ‘கேலக்ஸி எம் 21 எஸ்’ மாடலை பிரேசிலில் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த அக்டோபரில் பண்டிகைக்கால சிறப்பு விற்பனையையொட்டி இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக தெரிகிறது. இரண்டு மாடல்களுக்கும் இடையிலான ஒரே வித்தியாசம் ஸ்டோரேஜ் கான்ஃபிகரேஷன் மட்டுமே.

சாம்சங் கேலக்ஸி எம் 21 எஸ் ஸ்மார்ட்போன் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே, வேகமான சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 64 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டரை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 21 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது பிரேசிலில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.20,500 க்கு அறிமுகமாகி உள்ளது. இது சிங்கிள் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுடைய விலையாகும்.

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எம் 21 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-இல் இயங்குகிறது. இது 6.4 இன்ச் அளவிலான எஃப்.எச்.டி + (1,080x2,340 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது ஏற்கனவே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருப்பதால், இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.