chatgpt sam altman web
டெக்

ChatGPT-ல் ’ப்ளீஸ், தேங்க் யூ' சொல்லாதீங்க.. உங்களால வீண் செலவுதான்! சாம் ஆல்ட்மேன் கோரிக்கை!

சாட் ஜிபிடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தேங்க்ஸ், ப்ளீஸ் போன்ற சொற்களை பதிவிடுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் வீண் செலவு ஏற்படுவதாக உரிமையாளர் சாம் ஆல்ட்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

ப்ளீஸ், தேங்க்ஸ் போன்ற வார்த்தைகள் நற்பண்புகளாக கருதப்படுபவை. ஆனால், இந்த ஏஐ உலகில் அவற்றால் தேவைற்ற வெட்டிச்செலவுகள்தான் ஏற்படுவதாக கூறுகிறார் சாட் ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன்.

அதிகரிக்கும் வீண் செலவு..

சாட்ஜிபிடி செயலியை பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு தேவையான விவரங்களை கோரும் முன், கூடவே ப்ளீஸ் என்றும் அது கிடைத்தவுடன் தேங்க்ஸ் என்றும் பதிவிடுகின்றனர். ஆனால் இந்த பதில்களை தருவது இயந்திரம் என்பதால் அதற்கு இவ்வாறான மரியாதைகள் தேவையில்லை என்கிறார் சாம் ஆல்ட்மேன்.

‘ப்ளீஸ் Thank You சொல்லாதீங்க’ - ChatGPTயை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன்

இதற்கென குறிப்பிட்ட மின்னாற்றல் தேவைப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாவதாக கூறுகிறார் சாம் ஆல்ட்மேன். அதே நேரம் இதுபோன்ற சொற்களை பதிவிடுவது தரமான, மரியாதையான பதில்கள் தர உதவும் என வேறு சில ஏஐ நிபுணர்கள் கூறுகின்றனர்.