sam altman web
டெக்

ஸ்மார்ட்ஃபோன், கணினிகளுக்கு இனி தேவையே இருக்காது.. வருகிறது தொழில்நுட்ப உலகில் அடுத்த புரட்சி?

தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தப்போகும் புதிய சாதனத்தை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க தொழிலதிபர் சாம் ஆல்ட்மேன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PT WEB

சுமார் 30 ஆண்டுகளாக உலக மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத அம்சமாக ஸ்மார்ட்ஃபோன்கள் மாறிவிட்டன.

இந்நிலையில் தொழில்நுட்ப உலகில் அடுத்த திருப்பத்தை தர தொழிலதிபர் சாம் ஆல்ட்மேன் திட்டமிட்டுள்ளார்.

ஸ்மார்ட்போன், கணினிகளே தேவைப்படாது..

ஏஐ தொடர்பான அனைத்து வித சேவைகளையும் வழங்கும் ஒரு சாதனத்தை ஆல்ட்மேன் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
சாமானிய மனிதர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பல்வேறு வசதிகளுக்கு இச்சாதனம் தீர்வு தரும் எனக்கூறப்படுகிறது.

ஆப்பிள் ஐஃபோன், ஐபேடு, ஐமேக் போன்றவற்றை வடிவமைத்ததின் சூத்திரதாரியான ஜானி இவ் (jony ive) புதிய சாதனத்தை உருவாக்குவதில் சாம் ஆல்ட்மேனுக்கு உதவிவருகிறார்.

சாம் ஆல்ட்மேன்

இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சாம் ஆல்ட்மேன், தங்கள் முயற்சி வெற்றிபெற்றால் ஆப்பிள் ஐஃபோனுக்கு பிறகு தொழில்நுட்ப சாதன உலகில் புரட்சி படைக்கும் பொருளாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் ஸ்மார்ட்ஃபோன்கள், கணினிகளுக்கு தேவையே இருக்காது என்ற நிலை உருவாகும் என்றும் ஊகங்கள் உள்ளன. சாம் ஆல்ட்மேன் நடத்தும் ஓபன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய சாட் ஜிபிடி உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில்  அடுத்த கட்ட  மாற்றத்தை நோக்கி அவர் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.