சென்னை ஒன் செயலி web
டெக்

CHENNAI ONE APP | ரூ.1 டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.. முதல்முறை பயணம் செய்வோருக்கு சிறப்பு சலுகை!

‘சென்னை ஒன்’ செயலியில், தலா ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி, மெட்ரோ ரயில், மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் ஒருமுறை சலுகை பயணம் செய்யும் புதிய திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Rishan Vengai

சென்னை பெருநகர போக்குவரத்து அமைப்பு, 'CHENNAI ONE' செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைத்து பொதுப் போக்குவரத்துகளையும் ஒரே மொபைல் செயலியில் ஒருங்கிணைக்கிறது. முதல்முறை பயணிகளுக்கு ரூ.1 டிக்கெட் சலுகை வழங்கப்படுகிறது. பயணிகள் ஒரே QR-Code மூலம் பேருந்து, மெட்ரோ, ரயில் போன்றவற்றில் பயணிக்கலாம்.

சென்னை பெருநகர போக்குவரத்து (CUMTA) அமைப்பானது இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப்/ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துகளையும் ஒரே மொபைல் செயலில் இணைக்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது..

chennai one

அனைத்து பொதுப் போக்குவரத்தையும் ஒரே டிஜிட்டல் தளத்தின் கீழ் ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் நகரமாக சென்னை உருவெடுக்க உள்ளது.. அதன்படி ஒரே QR பயணச்சீட்டு மூலம் IOS மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'CHENNAI ONE' செயலிமூலம் சென்னை பெருநகர அனைத்து போக்குவரத்திற்கான பயணச்சீட்டை ஒரே செயலியில் பெற்றுக்கொள்ளலாம்.. இதை கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இச்செயலியின் சிறப்பம்சமாக 'One City, One Ticket' அம்சம் உள்ளது, இது பயணிகள் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், புறநகர் ரயில், வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களில் ஒரே QR-Code டிக்கெட்டைப் பயன்படுத்த அனுமதிக்கும். அதாவது பயணிகள் பல வரிசையில் நிற்கவோ அல்லது தனித்தனி டிக்கெட்டுகளை வாங்கவோ இல்லாமல் போக்குவரத்தை மேற்கொள்ளலாம், இது நேரத்தையும் சிரமத்தையும் மிச்சப்படுத்துகிறது. டிக்கெட் ஒருங்கிணைப்புடன் கூடுதலாக, இந்த செயலி பேருந்துகள் மற்றும் ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் குறித்த அப்டேட்களையும் வழங்குகிறது.

CHENNAI ONE-ல் மாதந்திர பயணச்சீட்டு பெரும் அம்சம்..

CHENNAI ONE செயலி மூலம் மாதாந்திரபேருந்து பயணஅட்டைகளை ஆன்லைனில் பெறும்வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. சென்னையில் போக்குவரத்துச் சேவைகளை ஒருங்கிணைக்கும் 'CHENNAI ONE' செயலி மூலம், டிக்கெட் விற்பனையில் 73லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.. மேலும் மெட்ரோ, மின்சார ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளுக்கான 3.7 லட்சம் QR டிக்கெட்டுகள் கடந்த 30 நாட்களில் விற்கப்பட்டுள்ளன.

சென்னை ஒன் செயலி

இந்தச் செயலிக்குக் கிடைத்துள்ள பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, மாநகரப் போக்குவரத்துக் கழகமானது 1000 மற்றும் 2000 ரூபாய் மதிப்பில் உள்ள மாதாந்திரப் பேருந்து பாஸ்களை, முதல் முறையாக ஆன்லைன் மூலமாகவே வழங்கும்வசதியும், விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

ரூ.1 டிக்கெட்டில் பயணிக்கும் வசதி..

‘CHENNAI ONE’ செயலியை மேலும் பயனர்களுக்கு கொண்டுசேர்க்கும் விதமாக முதல்முறை பயணம் செய்பவர்கள் ரூ.1 டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது..

chennai one app

அதன்படி தலா ஒருரூபாய் கட்டணம் செலுத்தி, மெட்ரோ ரயில், மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் ஒருமுறை சலுகை பயணம்செய்யும் புதிய திட்டம் இன்று முதல்அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு ரூபாய் டிக்கெட்டை பெற, சென்னை ஒன் செயலியை பதிவிறக்கம்செய்து பயண இடத்தை தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர் BHIM PaymentsApp அல்லது Navi UPI app மூலம் ஒரு ரூபாய்கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டைபெறலாம். இந்த சலுகைஒருமுறை பயணத்திற்கே பொருந்தும்என்றும், ஒருமுறைவெற்றிகரமாக பயணித்த பிறகு, அடுத்தடுத்த பயணங்களுக்கு வழக்கமான கட்டணங்கள்வ சூலிக்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செயலியை தற்போதுவரை தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..