டெக்

பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட ரோபோ

webteam

பணிச்சுமை காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்ட வினோத சம்பவம் கலிஃபோர்னியாவில் நிகழ்ந்துள்ளது.

வேலைச்சுமை காரணமாக மனிதர்கள் தற்கொலை செய்வது வழக்கம். ஆனால் ரோபோ இப்படி செய்யுமா? என கேள்வி எழுவதுண்டு. ஆனால் அப்படி புரிந்துகொள்ளக்கூடிய ஒரு சம்பவம் கலிஃபோர்னியாவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று நைட்ஸ்கோப் K5 (Knightscope K5) என்ற ரோபோவை தயாரித்தது. நைட்ஸ்கோப் K5 136 கிலோ எடை, 5 அடி உயரம் கொண்டது. இதில் ஜிபிஎஸ், சென்சார், கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ வாஷிங்டன் நகரில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் செக்யூரிடியாக வேலை செய்து வந்தது. பார்க்கிங் ஏரியாவில் வரும் வாகனங்கள் ஒழுங்காக நிறுத்தப்பட்டுள்ளதா? மாலுக்கு வருபவர்கள் விதிகளைக் கடைபிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதே இதன் வேலை. மணிக்கு 3 மைல் வேகத்தில் நடக்கும் இந்த சுறுசுறுப்பான ரோபோ தண்ணீருக்குள் விழுந்துவிட்டது.

ரோபோவின் இந்த நிலைக்கு என்ன காரணம் என ஆராய்ந்தபோது பணிச்சுமையும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. நீருக்குள் விழுந்த ரோபோவை பழுது பார்க்கும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் K5 பழைய நிலைமைக்கு இனி வரவே வராது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுறுசுறுப்பாக வேலை செய்து சுற்றிவந்த அந்த ரோபோ தீடீரென இப்படி செய்து கொண்டது மாலுக்கு வருவோரை துயரத்தில் ஆழ்த்தியது. K5 உடன் முன்பு எடுத்த ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து தங்களது வருத்தத்தைப் பொதுமக்கள் பதிவு செய்துவருகின்றனர்.