திட்டமிடப்பட்ட காலத்தை விட அதிக நேரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்க நேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் குழு அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டது.
சுனிதாவும், வில்மோரும் நுண் புவியீர்ப்பு விசையின் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தினர். நீண்ட தூர விண்வெளிப் பயணத்திற்கான புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அவர்கள் ஆய்வு நீண்டது. மேலும், விண்வெளியில் வீரர்கள் தங்களது உடல்நலனை சீராக வைத்திருக்க உதவும் E4D என்ற கருவியையும் சோதித்தனர். இது சைக்கிளிங் உள்ளிட்ட பயிற்சிகளை உள்ளடக்கியது. இந்த ஆய்வு, நீண்டநேர விண்வெளி ஆய்வுத் திட்டங்களுக்கு பயனளிக்கும்.
இதுபோன்று, விண்வெளி நிலையத்தில் சிவப்பு இலை கீரையையும் பயிரிட்டனர். இது விண்வெளி வீரர்களுக்கான உணவு குறித்த மேம்பட்ட திட்டங்களுக்கு வழிவகுக்கும். விண்வெளியில் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் எவ்வாறு தங்களை தகவமைத்துக்கொண்டு, உயிர்வாழ்கின்றன என்பது குறித்து சுனிதா வில்லியம்ஸின் குழு ஆய்வு நடத்தியது.