டெக்

ஒவ்வொரு 7 வினாடிக்கும் ஒரு வாடிக்கையாளர்: ஜியோ புரட்சி

ஒவ்வொரு 7 வினாடிக்கும் ஒரு வாடிக்கையாளர்: ஜியோ புரட்சி

webteam

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி ஜியோ சேவை ஆரம்பித்த பின்னர், ஒவ்வொரு 7 வினாடிக்கும் ஒரு வாடிக்கையாளர் ஜியோவில் இணைவதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

சுமார் 500 மில்லியன் வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்துள்ள ஜியோ, ஆறே மாதங்களில் இந்தியாவில் மாபெரும் புரட்சி செய்துள்ளது. இன்டர்நெட் டேட்டா உபயோகத்தின் அளவு 20 கோடி ஜிபியில் இருந்து 120 கோடியாக உயர்ந்துள்ளது என அம்பானி தெரிவித்துள்ளார். 

மொபைல் பிராண்ட்பேண்ட் உபயோகிப்பதில் 155- வது இடத்தில் இருந்த இந்தியா, ஜியோ வருகைக்கு பின் அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. இன்னும் வரும் மாதங்களில் மொபைல் பிராண்ட்பேண்ட் உபயோகிப்பவர்கள் மேலும் அதிகரிப்பர் என்றும் தெரிவித்தார். வாடிக்கையாளரை மேலும் கவர ஜியோ நிறுவனம் இலவசமாக ஜியோ ஃபோனையும் அறிமுகம் செய்ய உள்ளது.