ஜியோமி நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போனான ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ வரும் 22ஆம் டெல்லியில் வெளியாகிறது.
ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி மாடல் ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில், வசதிகள் அதிகம் கொண்டவையாக திகழ்கின்றன. இதனால் இந்த ஸ்மார்ட்போனுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஜியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ மாடலை வரும் 22ஆம் தேதி டெல்லில் வெளியிடவுள்ளது. இந்த போன் 23ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஃபிளிப் கார்ட் மற்றும் எம்.ஐ இணையதளங்களில் விற்பனைக்கு வருகிறது.
இதில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளேவுடன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.15,250 இருக்கும் என கூறப்படுகிறது. இந்த போன் கடந்த செப்டம்பர் மாதமே தாய்லாந்தில் வெளியிடப்பட்டது.
இதன் ஸ்டோரேஜை பொருத்தவரையில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஜிப் மூலம் கூடுதலாக 256 ஜிபி வரை ஸ்டோரேஜை அதிகப்படுத்திக்கொள்ள முடியும். இதன் பின்புறத்தில் 12 எம்பி (மெகா பிக்ஸல்) மற்றும் 5 எம்பி என இரட்டைக் கேமராக்கள் உள்ளன. முன்புறத்தில் 20 எம்பி மற்றும் 2 எம்பி என இரட்டை செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளன. இந்த போனில் 4,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது.