டெக்

வரவேற்பை பெறுமா ரெட்மி நோட் 10 புரோ மேக்ஸ்: மார்ச் 4ல் வெளியீடு!

EllusamyKarthik

ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி தயாரிப்பில் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு என சந்தையில் பிரத்யேக வரவேற்பு இருப்பதுண்டு. அதற்கு காரணம் நோட் சீரிஸ் போன்களின் தரம் என்று கூட சொல்லலாம். நோட் 3, 4 என ஆரம்பித்து இப்போது நோட் 10 புரோ மேக்ஸ் வரை பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். வரும் மார்ச் 4 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இப்போது கசிந்துள்ளன. 

இரண்டு ரேம் மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதிகளுடன் இந்த போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் அல்லது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜாக இருக்கலாம் என தெரிகிறது. 

மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5050 மில்லியாம்ப் திறன் கொண்ட இன்டெர்னல் பேட்டரி இந்த போனில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்நேப்டிராகன் 732ஜி சிப்செட் இதில் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.