டெக்

11,000 ரூபாய்... 6,000 mAh பேட்டரியுடன் ரெட்மி 9 பவர் அறிமுகம்!

webteam

6000 எம்.ஏ.ஹெச் பேட்டரியுடன் கூடிய ரெட்மி 9 பவர் செல்போனை சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999 க்கும், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட செல்போன் ரூ.11,999 க்கும் அறிமுகமாகி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் amazon, mi.com மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் வரும் டிசம்பர் 22 முதல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கருப்பு, சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும். ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் அளவிலான ஃபுல் ஹெச்டி மற்றும் கொரில்லா கிளாஸ் கொண்ட டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பிற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் கொண்டுள்ளது.

இந்த ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் ஸ்னாப்டிராகன் 662 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொருத்தவரை, ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 48 மெகாபிக்சல்கள் அளவிலான மெயின் கேமராவும், 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல்கள் டெப்த் சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளன. 8 மெகாபிக்சல் ஃபிரண்ட் கேமராவும் உள்ளது.

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ரெட்மி 9 பவரில், 18W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. சியோமி இந்தியாவில் ஸ்மார்ட்போனுடன் 22.5W சார்ஜரை கொடுக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் MIUI 12 அவுட்-ஆஃப்-பாக்ஸுடன் வருகிறது. டூயல் 4ஜி வோல்ட், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ப்ளூடூத் 5.0, USB type C போர்ட் போன்றவைகளை கொண்டுள்ளது.