டெக்

1300 ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி கின்னஸ் சாதனை - வீடியோ

1300 ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி கின்னஸ் சாதனை - வீடியோ

rajakannan

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி உலக கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

இத்தாலி நாட்டில் நிகழ்ந்தப்பட்ட இந்த சாதனையில் 1,372 ரோபோக்கள் இடம்பெற்றன. ரோபோக்கள் இசைக்கு ஏற்றார்போல் நடனமாடியது காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. 

ரோபோக்கள் தயாரித்து, அதனை பெரிய அளவில் நடனமாட வைக்கும் முயற்சி கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிரமாக செய்து வருகின்றன. 2017ஆம் ஆண்டு சீனாவில் நிகழ்ந்த்தப்பட்ட ரோபோ நடனம் தான் இதுவரை மிகப்பெரியதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் 1069 ரோபோக்கள் இடம்பெற்று நடனமாடியது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 

இத்தாலியில் 1,372 ரோபோக்கள் ஒன்றாக நடனமாட வைக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரோபோவும் 40 செ.மீ உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இவை ஆல்பா 1 எஸ் வகை ரோபோக்கள். அலுமினியத்துடன் பிளாஸ்டிக் கலந்த மெடிரியலால் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ரோபோக்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.