டெக்

ரியல்மி நார்ஸோ 50 ஸ்மார்ட்போன் நாளை முதல் விற்பனை! சிறப்பம்சங்கள் விவரம்

EllusamyKarthik

சீன நாட்டு மொபைல் போன் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் நாளை பகல் 12 மணி அளவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான நார்ஸோ (Narzo) 50 மாடல் போனை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இதனை ரியல்மி இந்தியா உறுதி செய்துள்ளது. அமேசான், ரியல்மி இணையதளம் மாதிரியானவற்றில் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த போனின் சிறப்பம்சங்கள்!

மீடியாடெக் ஹீலியோ G96 SoC, 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, வெறும் 70 நிமிடங்களில் போனின் பேட்டரியை 100 சதவிகிதம் சார்ஜ் செய்யும் வசதி, ரியர் சைடில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் AI கேமரா இடம் பெற்றுள்ளது. பக்கவாட்டில் (Side Mounted) ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், நீலம் மற்றும் கருப்பு என இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. 

குறிப்பாக 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் போன் 12,999 ரூபாய்க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் போன் 15,499 ரூபாய்க்கும் விற்பனையாக உள்ளது. இந்த போனின் எடை 194 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ள கேமிங் போன் எனவும் பிராண்ட் செய்யப்பட்டு வருகிறது.