டெக்

ரியல்மி GT, GT மாஸ்டர் எடிஷன் போன்கள் இந்தியாவில் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்ன?

EllusamyKarthik

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் GT மற்றும் GT மாஸ்டர் எடிஷன் போன்கள் அறிமுகமாகி உள்ளன. 5ஜி செக்மென்டில் இந்த இரண்டு போன்களையும் ரியல்மி களமிறக்கியுள்ளது. இரண்டு போன்களிலும் டிரிபிள் கேமரா மற்றும் 120Hz Super AMOLED டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. 

ரியல்மி GT சிறப்பம்சங்கள்!

ஆண்ட்ராய்ட் 11-இல் இயங்கும் இந்த போனில் டியூயல் நேனோ சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC, 4,500mAh பேட்டரி, டைப் சி சார்ஜிங் போர்ட், 65 மெகா பிக்சல் பிரைமரி கேமரா மாதிரியானவை உள்ளன. 

8GB ரேம், 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம், 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியாண்டுகளில் இந்த போன் கிடைக்கிறது. வரும் 25-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாம். 

ரியல்மி GT சிறப்பம்சங்கள்!

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி SoC, 4,300mAh பேட்டரி, 32 மெகா பிக்ஸல் கொண்டுள்ள செல்ஃபி கேமரா மாதிரியானவை GT எடிஷனிலிருந்து மாறுபட்டுள்ளது. மேலும் ஸ்பெஷல் எடிஷனாக ‘சூட்கேஸ்’ டிசைனில் இந்த போன் வெளிவந்துள்ளது. 

அதே போல 6GB ரேம், 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் , 8GB ரேம், 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம், 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது. இதில் 8GB ரேம்  கொண்டுள்ள போன்கள் வரும் 26-ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.