டெக்

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி C31: ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்

EllusamyKarthik

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட போன்களை உருவாக்கி வரும் சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ரியல்மி, இந்திய சந்தையில் ‘C31’ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன் இது. அதனால் இதனை மெயில் செக் செய்வது, இன்ஸ்டா பதிவுகளை பார்ப்பது போன்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். 

6.5 இன்ச் அளவு கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே; ஆக்டோ-கோர் யுனிசோக் (Unisoc) T612 புராசஸரையும் கொண்டுள்ளது. 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டில் இந்த போன் கிடைக்கிறது. 

பின்பக்கத்தில் மூன்று கேமரா மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இதில் உள்ளது. 5000mAh பேட்டரி, மைக்ரோ USB 2.0, 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி மாதிரியானவை இதில் உள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனை 8,999 மற்றும் 9,999 ரூபாய்க்கு வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.