டெக்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமானது ரியல்மி C21Y : சிறப்பம்சங்கள் என்ன?

EllusamyKarthik

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் C21Y போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் களம் இறக்கப்பட்டுள்ளது. இந்த போனின் செயல்பாடு மற்றும் தரத்தை அறியும் நோக்கில் சோதனை மேற்கொண்டு TÜV Rheinland High-Reliability சான்றிதழ் பெற்றுள்ளது. 

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டுகளில் இந்த போன் கிடைக்கிறது. வரும் ஆகஸ்ட் 30, நண்பகல் 12 மணி முதல் விற்பனை தொடங்க உள்ளது. 

சிறப்பம்சங்கள் என்ன?

ஆக்டா-கோர் Unisoc T610 புராஸசர், 6.5 இன்ச் HD டிஸ்ப்ளே, டியூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்ட் 11, பின்பக்கத்தில் மூன்று கேமரா, 4ஜி LTE, மைக்ரோ USB, 5000mAh பேட்டரி, ரிவேர்ஸ் சார்ஜிங் வசதி மாதிரியானவை இடம் பெற்றுள்ளன. 

இந்த போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.