சீனாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஜப்பானிய தொழில்நுட்பங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் க்யூஆர் குறியீட்டை மூங்கிலினால் உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளார்.
இப்போது எல்லாப் பொருட்களுக்கும் க்யூஆர் குறியீடு வந்துவிட்டன. ஒரு பொருளைப்பற்றிய விவரங்களைப் பெற இந்த க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் அதன் மொத்த விவரமும் கைக்கு வந்துவிடும். இது ஒரு தொழில்நுட்ப உலகின் சாதனையாக கூறப்படுகிறது. கண்ணுக்குத் தெரியாமல் வடிவமைக்கப்பட்டுள்ள சதுரவடிவிலான இந்த க்யூஆர் கோட்டில் சில ரகசிய பரிபாஷைகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதனைக் கொண்டே இந்தக் குறியீடுகள் தங்களின் பரிவர்தனையை செய்ய உதவி செய்கின்றன.
க்யூஆர் குறியீட்டை தேய்த்து ஸ்கேன் செய்து மேலதிக விவரங்கள், அல்லது அதன் பயன்பாட்டை தெரிந்துகொள்ளலாம். தகவல்கள் ரகசியங்களை பாதுகாக்க ஜப்பானை சேர்ந்த டொயோட்டா மற்றும் டென்சோ நிறுவனங்களால்1994 ஆம் ஆண்டு இந்த க்யூஆர் கோடுகள் உருவாக்கப்பட்டது.
டிஜிட்டல் உலகை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் சூழலில் சீனாவின் புஜியான் மாகாணத்திலுள்ள புழோ பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஸி ஷியாங் (Xie Shiyang), மூங்கில் பாலைகளில் க்யூஆர் கோடுகளை வடிவமைத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த க்யூஆர் கோடுகளை மூங்கிலில் வடிவமைப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு 15 நாட்களில் க்யூஆர் கோடுகளை வடிவமைத்து பதில் அளித்திருக்கிறார் மூங்கில் கலைஞர் ஸி ஷியாங். க்யூஆர் கோடுகளில் உள்ள வெள்ளை, கருப்பு கோடுகள் மற்றும் புள்ளிகளை சிதைக்காமல் அப்படியே வடிவமைத்திருக்கிறார் ஷியாங்.
முதலில் ஒரு க்யூஆர் கோடுகள் உருவாக்க 15 நாட்கள் எடுத்துக்கொண்ட ஸி ஷியாங், தற்போது மூன்று மணி நேரத்தில் நேர்த்தியான க்யூஆர் கோடுகளை உருவாக்கிவிடுகிறார். ஷியாங்கின் கலைத்திறனை கண்டு பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளன.
அத்துடன் மூங்கில் கலைப்பொருட்களின் கலைத்திறமையை சீனாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் முனைப்பில் களமிறங்கி இருக்கின்றன. சீனாவில் பெரும்பாலான தொழில்நுட்ப சாதனங்களில் இந்த க்யூஆர் கோடுகளே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.