டெக்

புதிய தொழில்நுட்பம் மூலம் தூய்மை பராமரிப்பு: பண்ணாரி அம்மன் கல்லூரிக்கு தேசிய விருது

kaleelrahman

புதிய தொழில்நுட்பம் மூலம் தூய்மை பராமரிப்புக்கான தேசிய விருது பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மூலம், நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் தூய்மை பராமரிப்பு பணிக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதில் சிறந்த கல்லூரியாக தேசிய அளவில் சத்தியமங்கலம் அடுத்த ஆலத்துக்கோம்பையில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம் மூலம் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்து தொற்று பரவாமல் பராமரித்து வருவதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி புதுடெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய தூய்மை பராமரிப்பு விருது வழங்கப்பட்டது.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த விருதை வழங்கினார். நிகழ்ச்சியில் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் சஹஸ்கர புத்தே, துணைத்தலைவர் பூனியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.