டெக்

‘Poimo’ ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள போர்டபிள் இ-ஸ்கூட்டர்

EllusamyKarthik

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ‘Poimo’ என்ற பெயரில் போர்டபிள் இ-ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளனர். எளிதில் பேக்-பேக்கிற்குள் (BackPack) வைத்து இந்த ஸ்கூட்டரை எடுத்து செல்ல முடியும் எனவும் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மின்சார மோட்டாரில் இயங்கும் இந்த ஸ்கூட்டரை டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். 

  

நான்கு சக்கரங்களை கொண்டுள்ள இந்த Poimo ஸ்கூட்டரில் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெர்மோபிளாஸ்டிக் பாலியூரிதீன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரை பலூன் போல காற்றை நிரப்பி எளிதாக பயன்படுத்த முடியும். அதன் மீது ஏறி அமர்ந்தால் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறங்கினால் அடுத்த நொடி ஆப் ஆகும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 

வெறும் இரண்டே நிமிடத்தில் இந்த ஸ்கூட்டரில் காற்று நிரப்பி பயன்படுத்த முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியுமாம். வரும் 2022-இல் இந்த வாகனம் ஜப்பான் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.