டெக்

இன்று வெளியாகிறது போகோ எக்ஸ்4 5ஜி! சிறப்பு அம்சங்கள் என்னென்ன? விலை எவ்வளவு?

இன்று வெளியாகிறது போகோ எக்ஸ்4 5ஜி! சிறப்பு அம்சங்கள் என்னென்ன? விலை எவ்வளவு?

webteam

ஜியோமி நிறுவனத்தின் அடுத்த மொபைலாக போகோ எக்ஸ் 4 5ஜி இன்று பிற்பகலில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

இந்தாண்டு ஜனவரியில் ஸ்பேயினில் உள்ள பார்சிலோனாவில் போகோ எக்ஸ் 4 5ஜி மொபைல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவிலும் இந்த மொபைலில் விற்பனை இன்று முதல் துவங்கவுள்ளது. இது இந்தியாவில் கடந்த ஆண்டு வெளியான போகோ எக்ஸ் 3 க்கு அடுத்த வெர்ஷனாக வெளியாக உள்ளது. Poco X3 Pro அதன் Snapdrahgon 860 SoC காரணமாக தனித்து நின்றது. ஆனால் போகோ எக்ஸ் 3இல் 5ஜி வசதி வழங்கப்படவில்லை. தற்போது 5ஜி வசதி உட்பட பல புது அம்சங்களோடு வெளியாகிறது Poco X4 Pro 5ஜி.

சிறப்பம்சங்கள்:

ஸ்னாப்டிராகன் 8-சீரிஸ் சிப்செட் கொண்ட மொபைலாக இது வெளியாகிறது. 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இந்த மொபைலில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மொபைலில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கும் என கூறப்படுகிறது. இது கருப்பு, நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்படும். 67W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 mAh பேட்டரி வசதி வழங்கப்ப்பட்டுள்ளது. Poco X4 Pro 5G ஆனது முழு HD+ தெளிவுத்திறன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் துளை-பஞ்ச் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இந்த ஃபோன் இயக்கப்படும்.

என்ன விலை?

Poco X4 Pro 5G இந்தியாவில் 20,000 ரூபாய்க்குள் இருக்கும் என்று Poco இந்தியாவின் இயக்குநர் அனுஜ் ஷர்மா ஏற்கனவே கூறியுள்ளார். Poco X3 Pro கடந்த ஆண்டு அடிப்படை மாறுபாட்டின் விலை ரூ.18,999. X4 Pro 5G விலையும் அதே விலையில் தொடங்கினால் ஆச்சரியப்பட வேண்டாம். இந்த போன் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடன் வெளியிடப்படும். இன்று பிற்பகல் இந்தியாவில் அறிமுகமானதும் போகோ எக்ஸ்4 5ஜி- இன் சரியான விலை தெரிந்துவிடும்.