டெக்

“உங்கள் தாயே வெட்கப்படுவார்” புள்ளி பாய் அப்ளிகேஷன் வடிவமைப்பாளர்களை சாடிய ‘போன்பே’ சி.இ.ஓ

“உங்கள் தாயே வெட்கப்படுவார்” புள்ளி பாய் அப்ளிகேஷன் வடிவமைப்பாளர்களை சாடிய ‘போன்பே’ சி.இ.ஓ

EllusamyKarthik

“Bulli Bai மொபைல் போன் செயலியை வடிவமைத்த வடிவமைப்பாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். நீங்கள் யாராக இருந்தாலும் இந்த செயலுக்காக வெட்கி தலை குனிந்து அவமானப்பட வேண்டும். உங்களை ஈன்றமைக்காக உங்களது தாயார்கள் இன்று வெட்கப்பட வேண்டும்” என போன்பே தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நிகம் ட்விட்டர் தளத்தின் மூலம் Bulli Bai செயலியை வடிவமைத்த வடிவமைப்பாளர்களை விமர்சித்துள்ளார். 

இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை மிகவும் மோசமான வகையில் சித்தரித்திருந்தது இந்த செயலி. அதோடு மோசமான கமெண்டுகளும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிலர் உத்தராகண்ட், பெங்களூரு பகுதிகளில் கைது செய்யப்பட்டு, தற்போது போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.