டெக்

ஜி.எஸ்.டி,க்கு முன்: பே.டி.எம்மின் ரூ.20000 வரை கேஷ்பேக்

ஜி.எஸ்.டி,க்கு முன்: பே.டி.எம்மின் ரூ.20000 வரை கேஷ்பேக்

Rasus

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்பாக, பே டிஎம் நிறுவனம், ப்ரீ-ஜிஎஸ்டி என்ற பெயரில் சிறப்பு விலை சலுகையை அறிவித்துள்ளது.

பே டிஎம் நிறுவனத்தின் பே டிஎம் மால் வாயிலாக ஜிஎஸ்டி வருகைக்கு முன்னதாக இருப்பில் உள்ள பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்தில், நாளை முதல் வரும் வியாழன் வரை (ஜூன்13-15) சிறப்பு கேஷ்பேக் சலுகைகள் வழங்க உள்ளது. எல்ஜி , சோனி , சாம்சங் நிறுவனங்களின் டிவி, லெனோவா, டெல், ஆப்பிள் நிறுவனங்களின் லேப்டாப், போன்றவற்றிற்கு அதிகபட்சமாக ரூ.20,000 வரை கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது. ஓப்போ மற்றும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ரூ.10,000 வரை கேஷ்பேக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும், சில அதிர்ஷ்ட்சாலி வாடிக்கையாளர்களுக்கு ஐஃபோன் 7 சிறப்பு இலவச பரிசாக வழங்கப்படவுள்ளதாகவும் பே டிஎம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமில்லாமல், ஆடைகள், ஃபேஷன் பொருட்களுக்கு பல்வேறு விதமான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. 

இந்த ப்ரீ-ஜிஎஸ்டி சலுகை விற்பனையில், 6000 சில்லறை விற்பனையாளர்களும், 5000-க்கும் மேற்பட்ட பிராண்டுகளும் பங்கு கொள்வதாக பே டிஎம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.