paytm
paytm PT
டெக்

Paytm-ல் இந்த வசதிகள் அடுத்த மாதத்திலிருந்து நிறுத்தப்படுகிறது; RBI கூறும் விளக்கம் என்ன?

Jayashree A

நீங்கள் paytm செயலி மூலமாக வர்தகமோ வியாபாரமோ அல்லது பணப்பரிமாற்றம் செய்வீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை... அடுத்த மாதத்திலிருந்து paytm செயலியில் புதிதாக உங்களால் பணத்தை மேற்கொண்டு இருப்பு வைத்துக்கொள்ள முடியாது. மேலும் Paytm Bank-ல் பணம் அனுப்ப முடியாது. ஆனால் ஏற்கெனவே அதில் இருக்கும் பணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம், ரீசார்ஜ் - டிக்கெட் புக்கிங் போன்றவையெல்லாம் யுபிஐ மூலம் செய்துகொள்ளலாம் என்று RBI தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 29 முதல் புதிய வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

paytm செயலியில் பணப்பரிவர்த்தனை செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன? இதைப்பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

Digi bank என்று சொல்லப்படும் paytm செயலியைக்கொண்டு நாம் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகிறோம். இந்த பணப்பரிவர்த்தனையில் paytm ஆனது தனது வாடிக்கையாளார்கள் யார், அவர் எங்கு இருக்கிறார், எந்த நோக்கத்திற்காக பணம் பரிமாறிக் கொள்ளப்படுகிறது போன்றவற்றையும் Paytm Bank குறித்த தகவல்களையும் முறையாக பெற்று அதை RBIக்கு தெரியப்படுத்துவதில்லை.

இத்தகைய நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால் ரிசர்வ் வங்கியானது KYC (know your customer) விதிகளை முறையாக பின்பற்றுமாறு paytm நிறுவனத்திற்கு பலமுறை எச்சரித்து இருந்தது. ஆனால் இதை paytm சரிவர பின்பற்றவில்லை.

இதற்கு காரணம் paytm-க்கு என்று தனியாக வங்கி கிளை கிடையாது. இருப்பினும் அது Wallet மற்றும் Bank ஆகிய வசதிகள் மூலம் இருப்பு வைத்துக்கொள்வதற்கு அனுமதித்தது. இதில் பரிமாறிக்கொள்ளும் பணத்தை பற்றிய விவரங்களையோ வாடிக்கையாளர்களின் விவரங்களையோ தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் paytm நிறுவனமானது கிராம் கிராமமாக சென்று தகவலை சேகரிக்கவேண்டும்.

சரி... டிஜிட்டல் முறையில் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றாலும் நடைமுறையில் அது சாத்தியமில்லை. இத்தகைய குழப்பங்களுக்கு மத்தியில் அந்நிறுவனம் மீது சில புகார்களும் வைக்கப்பட்டன. இதையடுத்தே RBI தற்பொழுது paytm மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் paytm ல் புதிதாக நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

ஆனால் வங்கிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள் போன்றவற்றில் வாடிக்கையாளார்களைப் பற்றிய தகவல்கள், (KYC), ஆதார்கார்டு, PAN Card போன்றவைகள் முறையாக பின்பற்றுவதால் வங்கிகள் மற்றும் அதன் செயலிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதால், அவை பொருளாதாரத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆகவே வர இருக்கின்ற காலங்களில் KYC விதிகளை முறையாக பின்பற்றும் ஆப் அல்லது தொலைதொடர்பு நிறுவனங்களில் பணப்பரிவர்த்தனை போன்றவையே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கலாம்.