ஒரு வெள்ளைநிற கிளியின் பறக்கும் முறையைக் கொண்டு ட்ரோன் விமான தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் ஆராய்ச்சியில், கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
GARY என்று பெயரிடப்பட்ட வெள்ளைக் கிளி, வித்தியாசமான முறையில் வேகமாகச் சிறகடித்துப் பறக்கிறது. இதன் பறக்கும் முறையை, 3டி மாதிரியில் பதிவு செய்து, ட்ரோன் எனப்படும் பறக்கும் வகை அதி நவீன விமானம் உள்ளிட்ட இயந்திரங்களை உருவாக்க கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள், முயற்சி செய்து வருகின்றனர். மற்ற ட்ரோன் விமானங்களை விட, இதன் வேகம் அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.