டெக்

‘டிக்டாக்’ செயலி பயன்பாட்டுக்கான தடையை மீண்டும் நீக்கியது பாகிஸ்தான்!

EllusamyKarthik

இன்றைய டிஜிட்டல் உலகில் பெருவாரியான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்று டிக்டாக். இந்தியாவில் இந்த செயலி தடை செய்யப்பட்டுள்ளது. இதே போலவே பாகிஸ்தான் நாட்டிலும் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. 

கடந்த 15 மாதங்களில் டிக்டாக் செயலி பயன்பாட்டுக்கு நான்கு முறை தடை விதித்துள்ளது பாகிஸ்தான். அந்த நான்கு தடையையும் பின்னர் பாகிஸ்தானில் திரும்பப் பெறப்பட்டுள்ளன. 

அநாகரீகமான கன்டென்ட் பரவுவதை தடுப்பதாக டிக்டாக் நிறுவனம் உறுதி அளித்ததன் பேரில் தடையை விலக்கிக் கொண்டுள்ளது பாகிஸ்தான். பாகிஸ்தானில் மட்டும் 39 மில்லியன் மக்கள் டிக்டாக் செயலியை டவுன்லோட் செய்துள்ளனர். சீன நிறுவனம் வடிவமைத்த இந்த செயலி கடந்த 2020 அக்டோபரில் பாகிஸ்தான் முதன்முதலாக தடைவிதித்தது பாகிஸ்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கன்டென்ட் குறித்து ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்கு புகார்களை பறக்க விட்டுள்ளது பாகிஸ்தான். அதே போல கடந்த 2008-இல் யூடியூப் தளத்திற்கு தடை விதித்திருந்தது பாகிஸ்தான்.