டெக்

ஓப்போ ‘ரெனோ’ ஸ்மார்ட்போன் - வரும் 28ஆம் தேதி வெளியீடு

webteam

ஓப்போ நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போனான ‘ரெனோ’ வரும் 28ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சீன நிறுவனமான ஓப்போ இந்தியாவில் பிரபலமடைந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக ஓப்போவும் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தங்கள் நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போனான ஓப்போ ரெனோ மாடல் போனை வரும் 28ஆம் தேதி வெளியிடுகிறது. இந்த போன் ஓப்போ ‘ரெனோ’ மற்றும் ‘ரெனோ 10 எக்ஸ்’ என்ற இரண்டு வெர்ஷன்களில் வெளியிடப்படுகிறது.

ஓப்போ ரெனோ மாடலில் மூன்று ரகங்கள் உள்ளன. 

முதல் ரகம் : 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் 

விலை ரூ.30,900 ஆகும்.

இரண்டாவது ரகம் : 6 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ்

விலை ரூ.34,000.

மூன்றாவது ரகம் : 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ்

விலை ரூ.37,100.

இதேபோன்று ஓப்போ ரெனோ 10 எக்ஸ் மாடலும் 3 ரகங்களில் வெளியாகவுள்ளது.

முதல் ரகம் : 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் 

விலை ரூ.41,200 ஆகும்.

இரண்டாவது ரகம் : 6 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ்

விலை ரூ.46,400.

மூன்றாவது ரகம் : 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ்

விலை. ரூ.49,500.

இதுதவிர ஓப்போ ரெனோ மற்றும் ரெனோ 10 எக்ஸ் இரண்டு ரகங்களும் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளன. ரெனோவில் 6.4 இன்ச் டிஸ்ப்ளேவும், ரெனோ 10 எக்ஸ்-ல் 6.6 இன்ச் டிஸ்ப்ளேவும் உள்ளது. ரெனோவை பொருத்தவரை 48 எம்பி மற்றும் 5 எம்பி என பின்புறத்தில் இரட்டை கேமரா உள்ளது. அத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. ‘10 எக்ஸில்’ 48 எம்பி, 16 எம்பி மற்றும் மற்றும் 8 எம்பி என பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. பேட்டரியை பொருத்தமட்டில் ரெனோவில் 3,765 எம்.ஏ.எச் திறனும், ‘10 எக்ஸில்’ 4,065 எம்.ஏ.எச் திறனும் வழங்கப்பட்டுள்ளது.