ஓப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ஆர்17’ மற்றும் ‘ஆர்17 ப்ரோ’ மாடல்கள் இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ளன.
ஒப்போ நிறுவனம் தங்கள் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களான ‘ஆர்17’ மற்றும் ‘ஆர்17 ப்ரோ’ ஆகிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சீனாவில் வெளிவந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த இந்த போன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இதை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடுகிறது.
இதில் ஓப்போ ‘ஆர்17’ மாடலை பொருத்தவரை இரண்டு ரகங்களில் வெளியாகிறது. ஒன்று 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜுடன், ரூ.35,600 விலை கொண்டது. மற்றொரு ரகம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜுடன் ரூ.32,600 விலை கொண்டது. இதேபோன்று ‘ஆர் 17 ப்ரோ’ மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூபாய் ரூ.43,800 ஆகும். இதிலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளத்தில் இயங்கும். இவற்றின் டிஸ்ப்ளே 6.4 இன்ச் கொண்ட முழு ஹெச்டி வசதி கொண்டவை. அத்துடன் இது தண்ணீரில் விழுந்தால் சேதமடையாத வாட்டர் ப்ரூப் வசதி உள்ளது. மேலும் டிஸ்பிலே மீதே பிங்கர் பிரிண்ட் வசதி கொண்டது.
‘ஆர்17 ப்ரோவை’ மாடலை பொருத்தவரையில் பின்புறத்தில் 12 எம்பி (மெகா பிக்ஸல்), 20 எம்பி சென்ஸார் கேமரா மற்றும் டொஃப் 3டி கேமரா என மொத்த மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘ஆர்17’ மாடலின் பின்புறத்தில் 16 எம்பி மற்றும் 5 எம்பி என இரட்டைக் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் 25 எம்பி செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. ‘ஆர் 17 ப்ரோ’வில் 3,700 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரியும், ‘ஆர்17’ மாடலில் 3,500 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.