டெக்

கூகுள் செயலியின் புது வடிவம்

webteam

கூகுள் செயலியில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செல்போனின் ஐ.ஒ.எஸ்சில் சில மாதங்களாக அந்த நிறுவனம் புதுப்புது மற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதனுடைய வடிவமைப்புகளை மறுவடிவம் செய்துள்ளது. தற்பொழுது தனிநபர் ஃபீட்ஸ்(feeds) பக்கத்தில் அப்டேட் இமெயில், கேலண்டர், டைம் டிராவல் போன்றவை தனித்தனியாக பார்ப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு மக்களிடம் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. ஏனெனில் இவை அனைத்து ஃபீட்ஸ்சும் ஒரே இடத்தில் அமைவது போல் இருந்தால் இன்னும் எளிதாக இருந்து இருக்கும்.  

அதேபோன்று  சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ள ”எடிட் ஸ்கிரீன் ஷாட்” மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. கூகுள் செயலியில் சமீபத்தில் அறிமுகப்படுத்திய எடிட் ஸ்கிரீன் ஷாட், கூகுளில் இருந்துக் கொண்டே எடிட், கிராஃப் செய்துக்கொள்ள எளிய வசதி உள்ளது. இதற்காக ஒரு புது செயிலிக்குள் சென்று புகைப்படங்களை எடிட் செய்ய வேண்டியது இல்லை. Google Settings->Accounts & Privacy->Edit and share screenshots சென்று நம் புகைப்படத்தை நமக்கு பிடித்தது போல் வடிவமைத்துக் கொள்ளலாம்.