டெக்

ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து எலெக்ட்ரிக் சைக்கிள், ஸ்கூட்டர்களை உருவாக்கும் ஒன்பிளஸ்?

EllusamyKarthik

ஸ்மார்ட் போன், வாட்ச் மாதிரியான டிஜிட்டல் டிவைஸ் உருவாக்கத்தில் பிரபலமான ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்ததாக வாகன உற்பத்தியில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ‘ஒன்பிளஸ் லைஃப்’ என்ற பெயரில் புதிய பிராண்ட் ஒன்றை வர்த்தக முத்திரைக்கான பட்டியலில் காணப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மொபைல் அல்லாத சாதனங்களை உற்பத்தி செய்வதற்கான டிரேட் மார்க் என தெரிகிறது. 

இதன் மூலம் செல்ஃப் பேலன்ஸிங் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் போர்ட்ஸ், ரிமோட் மூலம் கன்ட்ரோல் செய்யப்படும் வாகனங்கள், ஓட்டுநர் இல்லாத கார் மற்றும் பல வாகனங்களை ஒன்பிளஸ் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இதற்கான வேலைகள் இப்போதைக்கு தொடங்கி உள்ளதாகவும். இது சந்தையில் அறிமுகமாக எப்படியும் சில ஆண்டுகளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.