ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஒன்பிளஸ் நிறுவனத்தின் 9 சீரிஸ் ரக ஸ்மார்ட்போன்கள் சில மணிகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டன. ஒன்பிளஸ் 9 5ஜி இரண்டு வேரியண்டிலும், 9 புரோ 5ஜி இரண்டு வேரியண்டிலும் வெளியாகி உள்ளது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 5ஜி போனின் விலை 49,999 ரூபாய். 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 5ஜி போனின் விலை 54,999 ரூபாய். அதே போல 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 புரோ 5ஜி போனின் விலை 64,999 ரூபாய். 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 புரோ 5ஜி போனின் விலை 69,999 ரூபாய் என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இதன் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை அந்நிறுவனம் விரைவில் வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
இரண்டாண்டு வாரண்டியுடன் இந்த போன் வெளியாகும் என ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Pete Lau தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.