ஸ்மார்ட் போன்கள் மற்றும் எலக்ட்ரிக் பொருட்களை உற்பத்தி செய்யும் சீன நிறுவனமான ஒன்பிளஸ், தங்களுடைய வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 13, 13R ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
கடந்தாண்டில் வெளியான மொபைல் மாடல்களில் இடம்பெற்ற புது புராசஸ்ஸர், பெரிய பேட்டரி, வேகமான சார்ஜிங், மேம்படுத்தப்பட்ட IP ரேட்டிங்ஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட குவாட் கர்வ்டு டிஸ்பிளே போன்றவற்றை விட, புதிய அப்டேட்டுடன் ஒன்பிளஸ் 13, 13R அறிமுகமாகியுள்ளது.
OnePlus 13 ஜனவரி 10-ம் தேதியிலிருந்தும், OnePlus 13R ஜனவரி 12-ம் தேதியிலிருந்தும் இந்தியாவில் சந்தைக்கு வருகின்றன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.
OnePlus 13 ஸ்மார்ட் போன்,
12 GB/256 GB மாடல் விலையானது ரூ.69,999-ல் தொடங்குகிறது.
16 GB/512 GB மாடல் ரூ.76,999 விலைக்கும்,
24 GB/1 TB மாடல் ரூ.89,999 விலைக்கும் விற்கப்படுகிறது.
இது ஜனவரி 10 முதல் விற்பனைக்கு வர உள்ளது.
OnePlus 13R ஸ்மார்ட் போன்,
12 GB/256 GB மாடல் ரூ.42,999 விலைக்கும்,
16 GB/512 GB மாடல் ரூ.49,999 விலைக்கும் விற்கப்படுகிறது. இது ஜனவரி 12 முதல் விற்பனைக்கு வர உள்ளது.
OnePlus 13 ஸ்மார்ட் போன்,
* 4,500 nits ப்ரைட்-னஸ் உடன் 6.82 இன்ச் LTPO 4.1 QHD+ டிஸ்ப்ளே
* 120 Hz வரையிலான மாறக்கூடிய புதுப்பிப்பு வீதம்
* தண்ணீர் பாதுகாப்பிற்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங் மதிப்பிடப்பட்டுள்ளது
* 6000 mAh பேட்டரி, 100W SUPERVOOC சார்ஜிங்
* Snapdragon 8 Elite புராசஸ்ஸர் உடன் OxygenOS
* 50 MP + 50 MP + 50 MP என மூன்று ப்ரைமரி கேமராக்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும் Sony Lyt 808 சென்சார் கொண்ட Hasselblad-டியூன் செய்யப்பட்ட கேமரா, Sony Lyt 600 டெலிஃபோட்டோ கேமரா 3x ஜூம், அல்ட்ராவைடு சென்சார் கேமரா முதலிய அம்சங்கள் இடம்பெறுகிறது.
*முன்பக்க கேமரா 32 MP Sony IMX615 சென்சார் உடன் இடம்பெற்றுள்ளது
OnePlus 13R ஸ்மார்ட் போன்,
* ஒன்பிளஸ் 13-ல் உள்ளதை போன்று அதே ப்ரைட்-னஸ் மற்றும் புதுப்பிப்பு வீதத்துடன் 6.78 இன்ச் ProXDR டிஸ்பிளே
* 6000 mAh பேட்டரி, 80W SUPERVOOC சார்ஜிங்
* Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் OxygenOS
* 50 MP + 50 MP + 8 MP என மூன்று ப்ரைமரி கேமராக்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும் Sony Lyt 700 சென்சார், டெலிஃபோட்டோ கேமரா, அல்ட்ராவைடு சென்சார் கேமரா முதலிய அம்சங்கள் இடம்பெறுகிறது.
* முன்பக்க கேமரா 16 MP உடன் இடம்பெற்றுள்ளது