ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் அமேசானில் விற்பனைக்கு விடப்பட்ட 5 நிமிடத்தில் முழுவதுமாக விற்றுத் தீர்ந்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5T. முன்னோட்ட விற்பனையாக அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் 1 மணி நேரம் மட்டும் இன்று விற்பனைக்கு விடப்பட்டது. ஆனால் விற்பனைக்கு விடப்பட்ட 5 நிமிடத்தில் அனைத்து போன்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் விற்பனையில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, நவம்பர் 28-ஆம் தேதி முதல் மீண்டும் இந்தியாவில் ஒன்பிளஸ் 5T விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,999 என இந்தியாவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.37,999-க்கு கிடைக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது உடனடி தள்ளுபடியாக ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சகல வசதிகளுடன் உள்ள ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனை வாங்க, பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.