Ola S1 Pro Sona pt
டெக்

'தங்க ஸ்கூட்டர் வேணுமோ தங்க ஸ்கூட்டர்'.. ஓலா நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!

தங்கத்துடன் வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

துர்கா பிரவீன் குமார் .பூ

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் Pure 24-காரட் தங்கத்தோடு வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 'ஓலா S1 ப்ரோ சோனா' வேரியண்ட்டானது முத்து போன்ற வெள்ளை மற்றும் தங்க முலாம் பூசப்பட்டு ஒரு தனித்துவமான தோற்றத்தை கொண்டுள்ளது. மேலும் சில பாகங்கள் 24-காரட் தங்கத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் உற்பத்தியாளர் தங்களுடைய விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க்கை டிசம்பர் 25, 2024-க்குள் 4000 அவுட்லெட்டுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.

சிறப்புகள் என்ன?

இந்த ஸ்கூட்டரின் பிரேக் லிவர்கள், மிரர் ஸ்டாக்ஸ், பில்லியன் ஃபுட்ரெஸ்ட்கள், கிராப் ஹேண்டில்கள், வீல் ரிம் மற்றும் சைட் ஸ்டாண்ட் ஆகியவை தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. டெலஸ்கோபிக் ஃபோர்க், ஸ்விங்கார்ம் மற்றும் ரியர் மோனோஷாக் ஸ்பிரிங் ஆகியவைக்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.

இதனுடன், பிரத்யேக அம்சங்களுடன் MoveOS Software வருகிறது. மேலும் வண்டியின் இரட்டை நிறத்திற்கு கான்ட்ராஸ்ட்டாக லெதர் சீட் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தங்க நிறத்தில் திரட் கொடுக்கப்பட்டுள்ளது. கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த வண்டியை வெளியில் எடுத்துச்செல்வதே பெரும் பாடாகத்தான் இருக்கும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சுத்தமான தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள பைக்கின் வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விற்பனைக்கு புதிய முயற்சியில் இறங்கிய நிறுவனம்..

பிராண்டின் வழக்கமான மாடல்களைப் போல் இல்லாமல், Ola S1 Pro Sona வேரியண்ட் விற்பனைக்கு வராது. மாறாக, ஓலா நிறுவனம் நடத்தும் #OlaSonaContest போட்டியில், வெற்றிபெறுவோருக்கு பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் பங்கேற்க நினைப்பவர்கள், Ola S1 உடன் ஒரு ரீல்ஸ் செய்து அல்லது பிராண்டின் ஸ்டோருக்கு வெளியே Ola S1 உடன் புகைப்படம், செல்ஃபியைக் கிளிக் செய்து வலைத்தளங்களில் @olaelectric, #SavingsWalaScooter மற்றும் #OlaSonaContest ஆகிய டேக் உடன் நீங்கள் ஏன் Ola Sona-க்கு தகுதியானவர் என்பதை பதிவிட வேண்டும். அதில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு வழங்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.