நுபியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட் மேஜிக் 3’ வெளியாகியுள்ளது.
சீன நிறுவனமான நுபியா டெக்னாலஜிஸ் ‘ரெட் மேஜிக் 3’ என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. ஸ்நாப் ட்ராகன் 855 பிராஸசருடன் வெளிவந்துள்ள இந்த போன், 4 ரகங்களிலான ரேம் மெமரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் என நான்கு ரகங்களில் வெளிவந்துள்ளது. இந்திய மதிப்பில் அவற்றின் விலை முறையே ரூ.30,000, ரூ.32,000, ரூ.36,300 மற்றும் ரூ.44,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் 6.65 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 48 எம்பி பின்புற கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 5000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை 30 வாட் திறன் சார்ஜர் கொண்டு 10 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிட முடியும். இந்தப் போன் நுபியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மே 3ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.