இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 'Calling Name Presentation' (CNAP) என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மூலம், செல்போன் திரையில் அழைப்பாளரின் அதிகாரப்பூர்வ பெயர் காணப்படும். இது மோசடி மற்றும் ஸ்பாம் அழைப்புகளை அடையாளம் காண உதவும்.
செல்போன் திரையில் இனி Fake Caller, Spam, Unknown Callers-களுக்கு பதிலாக யார் அழைக்கிறார்களோ அவர்களுடைய பெயர் தெரியும்படியான புதிய மாற்றத்திற்கான திட்டத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், நீங்கள் ஒரு அழைப்பைப் பெறும் போது அந்த நபரின் அதிகாரப்பூர்வ பதிவு செய்யப்பட்ட பெயர். அதாவது அவர் சிம் கார்டு எடுத்த போது அளித்த பெயர். உங்கள் மொபைல் திரையில் காணப்படும்.
இந்த வசதி ‘Calling Name Presentation’ (CNAP) என்ற புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும்.
இந்த CNAP மூலம் மோசடி அழைப்புகள், ஸ்பாம் அழைப்புகள், மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காணுவது மிக எளிதாகும் என கூறப்படுகிறது
அதே சமயம் பலர் கேட்கும் கேள்வி.. அப்படியென்றால் இது Truecaller மாதிரியே தானா?
அனால் அதுதான் இல்லை! Truecaller மற்றும் TRAI-யின் CNAP சேவை இரண்டிற்ற்கும் வித்தியாசம் உள்ளது.
Truecaller ஒரு தனியார் நிறுவனத்தின் செயலி.
அது பயனாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பெயரை காட்டும். அதாவது, யாராவது ஒருவரின் நம்பர் அவருடைய தொடர்பு பட்டியலில் (Contacts) எப்படி சேமிக்கப்பட்டுள்ளது என்பதையே காட்டும். அது அதிகாரப்பூர்வமாக சரியான பெயராக இருக்காமல் இருக்கலாம். உதாரணத்திற்கு Name sollamudiyathu என்று இருக்கும்
ஆனால் CNAP சேவை முற்றிலும் அரசு அங்கீகாரம் பெற்றது.
இது நேரடியாக தொலைத்தொடர்பு நிறுவனங்களின் (Airtel, Jio, Vi, BSNL போன்றவை) தரவுத்தளத்திலிருந்து பயனாளரின் பெயரை பெறும். அதனால் இது மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமானதாக இருக்கும்.
மேலும், TRAI இந்த சேவையை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கம் பயனாளர்களின் பாதுகாப்பையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவது.
அதோடு, தொந்தரவு அழைப்புகள் மற்றும் மோசடி முயற்சிகளை குறைப்பது என்று சொல்லப்பட்டுள்ளது
அதேசமயம் தனியுரிமை சிக்கல்களை தவிர்க்க, பயனாளர்களின் அனுமதி பெற்ற பின்னரே அவர்களின் பெயர் பிறரின் திரையில் காட்டப்படும் என TRAI தெளிவுபடுத்தியுள்ளது.
மொத்தத்தில், விரைவில் அமலுக்கு வரும் இந்த CNAP சேவை, இந்திய மொபைல் உலகில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளது.