டெக்

காகிதப் படங்களை டிஜிட்டலாக மாற்றலாம்

காகிதப் படங்களை டிஜிட்டலாக மாற்றலாம்

webteam

காகிதங்களில் வரையும் ‌படங்களை டிஜிட்டல் ஓவியங்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

நவீன தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் இந்த காலத்தில் காகிதம் இல்லாமல் டிஜிட்டலாக வரையக்கூடிய ஒவியங்களுக்குதான் மவுசு அதிகம். ஆனால் சிலரால் காகிதங்களில் மட்டுமே அழகான படங்களை துல்லியமாக வரைய முடியும். அப்படிப்பட்டவர்களின் படங்களை டிஜிட்டல் மயமாக மாற்ற Iskn என்கிற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதில் பேனா, பென்சில், காகிதம் வைத்து வரைவதற்கான pad என மூன்று டிஜிட்டல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

லேப்டாப் போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த டிவைசில் பென்சிலை பொருத்தி, காகிதத்தை அதற்கான pad- இல் வைத்து வரைந்தால் அது டிஜிட்டல் ஓவியமாக மாறிவிடும். கீழே உள்ள காகிதத்தில் படம் வரைய வரைய மேலே உள்ள திரையில் அது பிரதிபலிக்கும். இந்த pad- இன் விலை 2000 ரூபாயாகவும், பென்சிலின் விலை 1270 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல ஓவிய பிரியர்களை கவர்ந்திருக்ககூடிய இந்த புதிய தொழில்நுட்பமானது www.iskn.com http:/www.iskn.com என்ற இணையதள முகவரியில் விற்பனைக்கு வந்துள்ளது.