டெக்

'புக் மை ஷோ' வுடன் கைகோர்த்த 'வாட்ஸ்அப்'

'புக் மை ஷோ' வுடன் கைகோர்த்த 'வாட்ஸ்அப்'

webteam

வாட்ஸ் அப் நிறுவனம், புக் மை ஷோவுடன் இணைந்துள்ளது. இதன் மூலம் சினிமா டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யும் செய்தியை வாட்ஸ் அப்பில் பெறலாம். 

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள வாட்ஸ் அப் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் - அப், ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ஆன்லைனில் சினிமா டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யும், புக் மை ஷோ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. 
தற்போது வரை சினிமா டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது மின்னஞ்சல் அல்லது மெசேஜ் மூலம் டிக்கெட் உறுதிப்படுத்துதலுக்கான செய்தியை பெறுவர். ஆனால் இனி, புக் மை ஷோ மூலம் ஆன்லைனில் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தால், அதற்கான உறுதிப்படுத்துதல் செய்தியை வாட்ஸ் - அப் செயலியில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.