X new update
X new update X
டெக்

இனி X-தளத்தில் ஆன்ட்ராய்ட் பயன்பாட்டாளர்கள் “Audio-Video Call” செய்யலாம்! புதிய அப்டேட் அறிமுகம்!

Rishan Vengai

சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக திகழும் X (டிவிட்டர்) தளத்தை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வெளியுலகத்தோடு தன்னை இணைத்துகொள்ளும் முதன்மை ஆன்லைன் வழித்தளமாக இருந்துவரும் எக்ஸை, எலான் மஸ்க் கையகப்படுத்தியதிலிருந்து பல்வேறு புதிய அறிவிப்புகளையும், அப்டேட்களையும் எக்ஸ் தளம் முன்னெடுத்துவருகிறது.

”அனைத்தும் கிடைக்கும்” ஒரு அப்ளிகேஷனாக எக்ஸை உருவெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து எலான் மஸ்க் மற்றும் குழு பயணித்து வருகிறது. இந்தமாத தொடக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட 2024-ம் ஆண்டிற்கான பார்வையில், UPI போன்ற பியர்-டு-பியர் பேமெண்ட், எக்ஸ் உடன் AI பயன்படுத்தும் அம்சங்களாக "வரிசைப்படுத்தாத இடுகைகளைக் காட்டு" மற்றும் “சந்தைப்படுத்துபவர்களுக்கான பல விளம்பர தயாரிப்புகள்” முதலிய அம்சங்களில் வேலைசெய்யவிருக்கிறது.

X new update

இந்நிலையில்தான், ஆன்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களும் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் புதிய அம்சத்தை “X” அறிமுகம் செய்துள்ளது.

ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி! சேவை பெறுவது எப்படி?

அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய அம்சத்தின் படி, எந்தவொரு பயனரும் அழைப்பைப் பெற முடியும். ஆனால் பணம் செலுத்திய பயனர்கள் மட்டுமே அழைப்பை மேற்கொள்ள முடியும். X அப்ளிகேஷனை அப்டேட் செய்வதன் மூலம் இந்த சேவையை நீங்கள் பெறுவீர்கள். ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பை பிரீமியம் யூசர்கள் மற்றவர்களுக்கு அழைக்க முடியும். மற்ற பயன்பாட்டாளர்கள் அழைப்பை பெறும் வசதியை மட்டும் பெறுகின்றனர்.

X new update

பயனர்கள் Settingle > Privacy and protection > Direct Messages > Enable audio and video calling என்பதை இயக்குவதன் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ கால் சேவையை இயக்கவும் அல்லது முடக்கவும் முடியும். அதே மெனுவில் பயனர்களுக்கு யார் அழைக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் திறனையும் இந்த அம்சம் வழங்குகிறது. அதன் படி பயனர்களின் “முகவரிப் புத்தகத்தில் உள்ளவர்கள், அவர்கள் பின்தொடர்பவர்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட பயனர்கள்” முதலிய தேர்வுகளிலிருந்து அவர்கள் பல விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

X new update

இந்த சேவையை பெற முதலில் எக்ஸ் ஆப்பை அப்டேட் செய்யுங்கள்.