டெக்

பட்ஜெட் விலையில் நோக்கியா C01 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் - சிறப்பம்சங்கள்!

EllusamyKarthik

இந்தியாவில் எப்போதும் நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன்களுக்கு தனி இடம். இன்று சந்தையில் சகல வசதிகளும் கொண்ட ஸ்மார்ட்போன்கள் கிடைத்தாலும் ‘நோக்கியா போன் மாதிரி வருமா?’ என கடந்த கால நினைவுகளை அந்த போனை பயன்படுத்தியவர்கள் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட பயனர்களை கவரும் நோக்கில் பட்ஜெட் விலையில் நோக்கியா C01 பிளஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். 

சிறப்பம்சங்கள் என்ன?

ஆண்ட்ராய்ட் 11 கோ எடிஷனில் வெளியாகி உள்ளது இந்த போன். 5.45 இன்ச் HD திரை, 5 மெகாபிக்சல் ரியர் கேமரா, 2 மெகாபிக்சல் ஃபிரண்ட் கேமரா, ஆக்டாகோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், டியூயல் நானோ சிம், 3,000mAh ரிமூவபிள் பேட்டரி இதில் உள்ளது. 

இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் சந்தையில் 5999 ரூபாய்க்கு கிடைக்கிறது.