டெக்

5 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் : நோக்கியாவின் புதிய படைப்பு

5 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் : நோக்கியாவின் புதிய படைப்பு

webteam

5 பின்புற கேமராக்கள் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை நோக்கியா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வெளியிடவுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டு வருகின்றன. இதிலும் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை பதிவு செய்யும் கேமரா கொண்ட போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. ஏனென்றால் தற்போதைய இளைஞர்கள் செல்ஃபி எடுப்பது மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரித்துள்ளது. ‘நோக்கியா 9 ப்யூர்வியூவ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போன் முழுமுழுக்க கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 5.99 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வேகமாக செயல்படும் அக்டோ-கோ குவால்கம் ஸ்நாப்ட்ராகன் 845 எஸ்.ஓ.சி பிராஸசர் உள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

போனின் பின்புறத்தில் மட்டும் 5 கேமராக்கள் உள்ளன. அதில் 3 மோனோகுரோம் சென்ஸார் வசதிகொண்ட 12 எம்பி (மெகா பிக்ஸல்) கேமராக்கள் ஆகும். மற்ற இரண்டும் ஆர்.ஜி.பி சென்ஸார் கொண்ட 12 எம்பி கேமராக்கள். இதுதவிர 20 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்த போனின் மூலம் போட்டோ எடுத்தால், 5 கேமராக்களால் துல்லியமான போட்டோ கிடைக்கும் என்பதை குறிக்கும் வகையில் இதற்கு பியூர்வியூவ் (pureview) எனப் பெயரிட்டுள்ளனர். இந்த போனில் 3,320 எம்.ஏ.எச் திறன் கொண்ட வயர் இன்றி சார்ஜர் செய்யும் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தைகளில் விற்பனைக்காக வரவுள்ளது.