அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நோக்கியா 3310 என்ற புதிய செல்போனை அறிமுகப்படுத்தினர். இதன் விலை 1.66 லட்சம் ஆகும்.
ஜெர்மனி நாட்டின் ஜி-20 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொண்டனர். பின்னர், நோக்கியா 3310 என்ற 2017ம் ஆண்டுக்கான புதிய மொபைல் ஃபோனை இருநாட்டு அதிபர்களும் அறிமுகப்படுத்தினர். 2.4-inch QVGA வண்ண தொடுதிரை மற்றும் 30க்கும் மேற்பட்ட சாப்ட்வேர்கள், டுயல் சிம், 2 மெகாபிக்சல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட இந்த மாடல் 1.6 லட்சம் ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனில் 22 நேரம் பேட்டரி வசதி உள்ளது. அதுமட்டுமின்றி, தங்கம் பூசப்பட்ட டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோரின் உருவம் பொறித்த சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் அவரது வெற்றிக்கு உறுதுணையாக ரஷ்யா செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.