டெக்

இந்தியாவில் அறிமுகமானது Noise கலர்ஃபிட் கேலிபர் ஸ்மார்ட்வாட்ச்!

EllusamyKarthik

இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது Noise நிறுவனத்தின் கலர்ஃபிட் கேலிபர் ஸ்மார்ட்வாட்ச். வரும் 6-ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் இந்த போன் விற்பனையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக இந்த வாட்ச் 1999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை என நான்கு வண்ணங்களில் இந்த வாட்ச் கிடைக்கும் என தெரிகிறது. 24 மணி நேர ஹார்ட் மானிட்டரிங், ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, ஸ்லீப், ஸ்ட்ரெஸ், உடலின் வெப்பநிலை என அனைத்தையும் இந்து மானிட்டர் செய்யுமாம். அதற்கான சென்சார்கள் இதில் உள்ளனவாம். 

1.69 இன்ச் டச் டிஸ்பிளே, 60 விதமான ஸ்போர்ட்ஸ் மோட், வாட்டர் ரெஸிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை பேட்டரி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.