டெக்

“பஞ்சரும் ஆகாது.. காற்றடிக்கவும் வேண்டாம்” - புதிய டயர் கண்டுபிடிப்பு

webteam

பஞ்சராகாத, காற்று நிரப்ப தேவையில்லாத புதிய ரக டயரை மிச்செலின் நிறுவனம் தயாரித்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டை மையமாக் கொண்டு இயங்கும் மிச்செலின் நிறுவனம், வாகனங்களுக்கு தேவையான டயர்களைத் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் அண்மை‌ தயாரிப்பாக பஞ்சராகாத, காற்று நிரப்ப தேவையில்லாத டயர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அப்டிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த டயரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மிச்செலின் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த டயரானது, சக்கரத்தில் இருப்பதைப் போன்ற ஸ்போக்ஸ் அமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. வளைந்து, நெளியும் தன்மைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதால் இது கரடு, முரடான சாலையில் செல்லும்போது ‌இலகுவாக செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. டயர் கிழிந்து விடுமோ என்ற அச்சம் தேவையில்லை என்ற அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ளதாக மிச்செலின் நிறுவனம் தெரிவித்துள்ளது‌.