ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை உருவாக்கிய ஆன்டி ரூபின், தனியாக ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
கூகுள் நிறுவனத்தில் இருந்து கடந்த 2014-ஆம் ஆண்டில் வெளியேறிய ரூபின், எசன்ஷியல் என்ற நிறுவனத்துடன் இணைந்து இப்போது செயல்பட்டு வருகிறார். ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை உருவாக்கிய இவர், இப்போது தனியாக ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை தயாரித்துள்ளார்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் இந்த ஃபோன், அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக 45 ஆயிரம் ரூபாய். முன்பக்கத்தின் நான்கு முனைகள் வரை விரிந்திருக்கும் திரையைக் கொண்டிருப்பது இந்த ஃபோனின் சிறப்பம்சம். டைட்டானியம் வடிவமைப்பு, இரண்டு பின்புற கேமரா, துல்லியமான செல்ஃபி கேமரா போன்றவையும் இதில் உள்ளன.