டெக்

3 புதிய ஆப்களை அறிமுகப்படுத்தியது டிராய்!

3 புதிய ஆப்களை அறிமுகப்படுத்தியது டிராய்!

Rasus

மைகால் ஆப் (Mycall app), மை ஸ்பீட் ஆப் (MySpeed app), டு நாட் டிஸ்டர்ப் (Do not disturb)  ஆகிய 3 புதிய ஆப்களை டிராய் அறிமுகம் செய்துள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு சேவை, வேகம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் தரத்தை உயர்த்தும் வகையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மூன்று புதிய செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மைகால் ஆப் (Mycall app), மை ஸ்பீட் ஆப் (MySpeed app), டு நாட் டிஸ்டர்ப் (Do not disturb) என்ற இந்த 3 செயலிகளும் நுகர்வோர் மற்றும் சேவை வழங்குபவர்களிடையே வெளிப்படைத்தன்மை கொண்டவையாக இருக்கும். 

மைகால் ஆப் தொலைபேசி அழைப்புகளின் தர கண்காணிப்பிற்காகப் பயன்படும். இது, தொலைபேசியின் அழைப்பு தரம் பற்றி வாடிக்கையாளர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உதவும். மேலும், வாடிக்கையாளர்கள் தொலைபேசி அழைப்பின்போது ஏற்படும் நெட்வொர்க் பிரச்சனை, ஆடியோவில் தாமதம் உள்ளிட்டவை குறித்து பதிவு செய்யலாம் என டிராய் தெரிவித்துள்ளது. 

MySpeed app மூலம் அனைத்து ஏரியாக்களிலும் உள்ள டேட்டாவின் வேகம் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கலாம்

Do not disturb -ன் மூலம் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து வரும் மார்கெட்டிங் அழைப்புகள், குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றைத் தவிர்க்கப் பயன்படும். இந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என டிராய் தெரிவித்துள்ளது.