நிலவு ஆய்வு
நிலவு ஆய்வு  முகநூல்
டெக்

நிலவு குறித்த 51 ஆண்டுகால ஆய்வில் கிடைத்த புதிய தகவல்!

PT WEB

தோண்ட தோண்ட பல ஆச்சர்யமான தகவல்களை வழங்கி கொண்டே இருக்கிறது நிலவு. பூமியின் துணைக்கோளான நிலவில் ஆய்வு செய்ய உலக நாடுகள் தொடர்ந்து முனைப்புக்காட்டி வருகின்றன.

நாசாவின் அப்பல்லோ 17 திட்டத்தின் மூலம் நிலவில் இருந்து 1972ஆம் ஆண்டு பூமிக்கு கொண்டுவரப்பட்ட 110 கிலோ எடை கொண்ட பாறை, மண் மாதிரிகளில் இப்போதும் ஆய்வுகள் தொடர்கின்றன.

நிலவு ஆய்வு

அரை நூற்றாண்டை கடந்த அந்த ஆய்வில் தற்போது புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி நிலவின் பாறை உள்ளே இருக்கும் செர்கான் கனிமத்தின் படிகங்களை ஆராய்ந்ததில், நிலவின் தோற்றம் மற்றும் அதன் வயது குறித்த துல்லியத்தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி, ஏற்கனவே கணித்ததை விட 4 கோடி ஆண்டுகள் முன்பே நிலவு உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது நிலவின் வயது 446 கோடி ஆண்டுகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சூரியக்குடும்பம் உருவாகிய 11 கோடி ஆண்டுகளிலேயே நிலவு உருவாகி இருக்கலாம்.

அணு பகுப்பாய்வு மூலம் இந்த துல்லியத்தகவல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. நிலவை ஆய்வு செய்வது மூலம் பூமியின் தோற்றம், மாற்றம் குறித்து புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.