டெக்

ஒரே நாளில் கட்டிமுடிக்கப்பட்ட வீடு

webteam

வீடு கட்ட சில மாதங்கள் ஆகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் வீடுகட்ட ஒரேயொரு நாள் போதும் என ரஷ்யாவின் அபிஸ் கோர் நிறுவனம் நிரூபித்துள்ளது.

கணினியில் இருக்கும் வரைபடத்தின் படி வீட்டின் சுவர்கள் கண் முன்னே உருவம் பெறுகின்றன. சிமென்ட் கலவை, இரும்புக் கம்பிகள் போன்றவற்றை கையாளும் 3டி இயந்திரம் 360 டிகிரி கோணங்களில் சுற்றி இயங்கும் திறன்கொண்டது. சிமென்ட் கலவையை குழாய் மூலம் செலுத்தி, அந்த இயந்திரத்தில் உள்ள பெரிய சிரிஞ்ச் போன்ற அமைப்பு வேகமாக சுவர்களை வடிவமைக்கிறது. கட்டமைக்கப்படும் போதே கதவு, ஜன்னல்கள், உள்கட்டமைப்புகளை அமைப்பது மற்றும் பெயின்ட் அடிப்பது உள்ளிட்டவை ஒவ்வொரு கட்டங்களில் செய்யப்படுகிறது. தண்ணீர் வசதி, மின்சாதனம் உள்ளிட்ட சகல வசதிகளுடன் புத்தம் புதிய வீட்டை வடிவமைக்க முடியும். நான்கு அறைகள் கொண்ட வீட்டினை கட்ட ஆன செலவு சுமார் 6.77 லட்சம் ரூபாயாகும். இது போன்ற வீடுகள் 175 ஆண்டுகளுக்கு தாங்கும் என்றும், அனைத்து தட்பவெப்ப நிலையில் தாங்கும் என உறுதியுடன் கூறுகிறது ஏபிஸ் கோர் நிறுவனம். ரஷ்யா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் இந்த திட்டத்தை கொண்டு செல்ல ஏபிஸ் கோர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.