டெக்

மின்சாரம் மூலம் தயாரிக்கப்படும் புதிய உணவு: ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை!

webteam

மின்சாரம் மூலம் புதிய உணவினை தயாரித்து ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

Lappeenranta University of Technology (LUT) மற்றும் VTT Technical Research Centre of Finland -ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து மின்சாரம், நீர், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் சில நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி புதிய உணவை தயாரித்துள்ளனர். இந்த உணவானது இரவு உண்பதற்கு சரியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நீர், கார்பன்-டை-ஆக்சைடு உடன் மின்சாரத்தை செலுத்தும்போது 50 சதவீதம் புரதமும், 25 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு உற்பத்தியாகிறது. சோதனை முயற்சியில் இருக்கும் இந்த உணவு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

VTT-யின் ஆராய்சியாளரான ஜூஹா-பெக்க பிட்கான் கூறுகையில், “இந்த உணவு தயாரிக்க அனைத்து மூலப் பொருட்களும் இயற்கையில் எளிதாக கிடைகிறது. கார்பன்-டை-ஆக்சைடு காற்றிலிருந்து எளிதாக கிடைக்கும். எதிர்காலத்தில், பாலைவனங்கள் மற்றும் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் மூலம் எளிதாகவும் விரைவாகவும் புரதம் செறிந்த உணவினைப் பெறலாம். விலங்குகளுக்கும் இதனை உணவாக அளிக்கலாம். இந்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் உணவு தயாரிக்க உதவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.