டெக்

மது அருந்தினால் வாகனம் இயங்காது - புதிய கருவி கண்டுப்பிடிப்பு

மது அருந்தினால் வாகனம் இயங்காது - புதிய கருவி கண்டுப்பிடிப்பு

webteam

மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கினால் வாகனம் தானாக நிற்கும் புதிய கருவியை சென்னையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்திய அளவில் விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.அதிக விபத்துகள் ஏற்பட சீரற்ற சாலைகள் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.ஆனால் மது போதையில் ஏற்படும் விபத்துகளும் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் எழிலரசன்,பிரவின் ஷர்மா,சுபாஷ், ஹரிஷ் ஆகிய நான்கு மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர். 

இதனை இரு சக்கர வாகனம் அல்லது 4 சக்கர வாகனத்தில் பொருத்தினால் அந்த வாகனத்தை ஓட்டுபவர் மது அருந்தி இருந்தால் வாகனம் துவங்காது.அதேபோல் இருசக்கர வாகனத்தில் கூடுதலாக ஹெல்மெட் அணியாமல் ஓட்டினாலும் வாகனம் துவங்காது.அதேபோல் இந்த கருவி பொருத்தி இருக்கும் போது விபத்து ஏற்பட்டால் ஆம்புலன்ஸ்கு உடனடியாக தகவல் சென்றுவிடும். 

திருடு போனாலும் எங்கு உள்ளது என்பதை அதில் உள்ள ஜிபிஎஸ் வைத்து கண்டு பிடித்து விடலாம். இந்த கண்டுபிடிப்பை தங்களது வாகனத்தில் பொருத்தி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.இந்த கண்டுபிடிப்பு விபத்துகளை தடுக்க பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.