டெக்

ஆண்ட்ராய்ட் போன்களில் புதிய எமோஜி ஷார்ட்கட்: கூகுள் நிறுவனம் பீட்டா சோதனை!!

Sinekadhara

நம் எண்ணங்களை வெளிப்படுத்த குறுந்தகவல்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம் உணர்வுகளை வெளிப்படுத்த எமோஜிகள் முக்கியம். வார்த்தைகள் கடத்த முடியாத பல விஷயங்களைக் கூட ஒரு எமோஜி கடத்திவிடுகிறது.

சமூக வலைதளங்களில் எமோஜிகளின் பங்கு அதிகம். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எமோஜிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

ஜூலை 17 உலக எமோஜி தினத்தை முன்னிட்டு கூகுள் Gboard இல் எமோஜி பாரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கீபோர்டில் எமோஜி பகுதிக்குச் சென்று எமோஜி அனுப்பவேண்டிய அவசியமிருக்காது. வார்த்தைகளை டைப் பண்ணும்போதே நமக்குப் பிடித்தமான எமோஜிக்களையும் பெறலாம். இதனால் ஒரு செய்தியை அனுப்பும் நேரத்தைக் குறைக்க இந்த ஷார்ட்கட் உதவியாக இருக்கும்.

இப்போது பீட்டா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியானது விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
கூடுதலாக நம்முடைய விருப்பத்திற்கேற்ப, இதில் சில பிரத்யேகமான ஜாலி எமோஜிக்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் 2013 ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்த தவளை, ஆமை போன்ற எமோஜிகளுக்கு இப்போது மீண்டும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.