2025 HONDA SP125 pt
டெக்

ரூ.91,771 விலையில் அறிமுகமானது புதிய 2025 ஹோண்டா SP125 பைக்.. சிறப்புகள் என்ன? முழு விவரம்!

இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா புதிய 2025 HONDA SP125 மாடல் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

துர்கா பிரவீன் குமார் .பூ

ஸ்டைலான வடிவமைப்பை கொண்ட இந்த பைக் Drum & Disc என இரு வேறியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. இதன் Drum வேறியண்ட் ரூ. ₹91,771 ஆகவும், Disc வேறியண்ட் ரூ. 1,00,284 ஆகவும் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது.

வடிவமைப்பு

வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஹோண்டா SP125 புதிய கிராபிக்ஸ் உடன் புதிய LED ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்டைத் கொண்டுள்ளது. பக்கவாட்டு பேனல், ஃப்யூவல் டேங்க் மற்றும் ஹெட்லைட் ஆகியவற்றில் உள்ள புதிய கிராபிக்ஸ் முழு வடிவமைப்பிலும் சிறிய புதுமையை சேர்க்கிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட பைக், முந்தைய பைக்கின் மஸ்குலர் ஸ்டைலை தக்க வைத்துள்ளது.

அம்சங்கள்:

இந்த பைக் 4.2-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலைக் கொண்டுள்ளது, புளூடூத் இணைப்புடன் ரைடர் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் மற்றும் Honda RoadSync பயன்பாட்டின் மூலம் வாய்ஸ் அசிஸ்ட் உள்ளது. மேலும் UBS-C சார்ஜிங் போர்ட்டையும் கொண்டுள்ளது.

புதிய 2025 ஹோண்டா SP 125 ஆனது 124சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யூவல்-இன்ஜெக்டட் எஞ்சினிலிருந்து 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது தற்போதைய OBD2B விதிமுறைகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. மேலும், 18 இன்ச் டியூப்லெஸ் டயர்களை பெறுகிறது. சீட்டின் உயரம் 790 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மிமீ ஆகும்.

11.2 லிட்டர் எரிபொருள் டேங்க்குடன், முன்பக்கம் 240/130 மிமீ டிஸ்க்/டிரம் செட்டப் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக், டெலஸ்கோபிக் யூனிட், டூயல் ஸ்பிரிங் செட்டப் ஆகியவற்றைப் பெறுகிறது. இந்த பைக் 10.7 பிஎச்பி பவர் மற்றும் 10.9 என்எம் பீக் டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஹோண்டா SP125 ஆனது TVS Raider 125, Bajaj Pulsar N125 மற்றும் Hero Xtreme 125R போன்றவற்றுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.